×

தமிழ்நாட்டில் 7-வது பொருளாதார கணக்கெடுப்பு: ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று தொடங்கி வைத்தார்

சென்னை: தமிழ்நாட்டில் 7-வது பொருளாதார கணக்கெடுப்பை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று தொடங்கி வைத்தார். கடந்த 1977-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை 6 முறை பொருளாதார கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. 7-வது முறையாக தற்போது டிஜிட்டல் முறையில் பொருளாதார கணக்கெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பொருளாதார கணக்கெடுப்பில் 33,000 பணியாளர்கள் ஈடுபடுகின்றனர். 5000 மேற்பார்வையாளர்கள் பணியில் ஈடுபட உள்ளனர். சுமார் மூன்று மாதங்கள் இந்த கணக்கெடுப்பு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிராமங்கள், நகரங்கள் உள்ளிட்ட இடங்களில் இயங்கி வரும் தொழிற்சாலைகள் குறித்தும் அவற்றால் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் குறித்தும் கணக்கெடுப்பு நடத்தப்படும் என தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தற்போது பொருளாதார மந்தநிலை நிலவி வரும் நிலையில் இந்த வாக்கெடுப்பு நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. கனரக, ஆட்டோமொபையில் நிறுவனங்கள் தங்களுக்கு ஏற்பட்ட இழப்புக் காரணமாக தங்களுக்குச் சொந்தமான நிறுவனங்களின் தொழிற்சாலைகளை மூடி வருகிறது. பல்வேறு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் வேலை நாட்களைக் குறைத்து கொண்டது. இந்த சூழலில் நாட்டில் தொழில் நிறுவனங்கள் எண்ணிக்கை, அதாவது கிராமங்களில் உள்ள தொழிற்சாலைகள், நகரங்களில் உள்ள தொழிற்சாலைகளில், வேலைவாய்ப்பை உருவாக்கும் தொழில்துறைகள் போன்றவற்றை கணக்கெடுக்க, மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

Tags : Tamil Nadu ,Governor ,Panwari Lal Pokhit ,Panwarilal Brokit , Tamil Nadu, Economic Survey, Governor, Panwarilal Purohit
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...